அம்மா உன் கைவாசம்.
அம்மா உன் கைவாசம்,
ஆவின்பால் நெய் வாசம்.
ஆறாத உன் பாசம்,
ஆகாயம் கீழ் தேசம்.
விட்டுச் சென்ற அன்னை நீ
விதிப்படியே போனாயோ!
தொட்டில் பாட்டுப் பாடி நீ
தூங்க வைக்க வருவாயோ!
கட்டில் துணை .
மனையாளும்,
கண்ணீரைத் துடைத்தாலும்,
கட்டையிது வேகும் மட்டும்,
அன்னை உன்னை
மறந்திடுமோ!
தொட்டில் இன்று ஆடுதம்மா,
தூலி தூலி பாடுதம்மா,
நாளெல்லாம் உன் பாட்டே
நானும் தூங்க அதைக் கேட்டே.
உன் சேலை வாசந்தான்;
என் மேலே பாசந்தான்.
உன் பேரன் என் பிள்ளை
உடன் பேசி தூங்கு றானோ!
அம்மாநீ வாழ்ந்த வீடு,
சும்மா ஆண்ட சொர்க்கத் தோடு,
இன்றும் அந்த நினைவோடு;
இல்லை ஒரு குறை பாடு
கொ.பெ.பிச்சையா.