Sunday, 16 November 2025

கனவு காணுவீர்!

கனவு காணுவீர்!

கனவு காணுவீர்! கனவு காணுவீர்
புதிய பாரதம் கனவு காணுவீர்!
கலாமின் இளைஞர் காந்திய இந்தியாக் கனவு காணுவீர்!

விதியென வெம்பி வீணாகிக் கிடக்காமல்,
கனவு காணுவீர்! கனவு காணுவீர்!
உலகின் முதன்மை உன்னத இந்தியாக் கனவு காணுவீர்! 
கலாமின் கனவு நினைவாகிடக் கனவு காணுவீர்.

ஊழல் ஓழிந்த உன்னத உலகைக் கனவு காணுவீர்.
ஆளுமை உண்மை  ஆளும் நன்மை
அடையக் கனவு காணுவீர்.
மேலும் மனிதம் வாழும் புனிதம் கனவு காணுவீர்.
நாளும் புதுமை போலும் இளமை இந்தியாவைக் கனவு காணுவீர்

ஏழ்மை யில்லா உலகினைக் கனவு காணுவீர்! 
இந்தியத் தலைமை ஏற்கு முலகைக்
கனவு காணுவீர்! 
அறிவியல் மேலாண்மை இந்தியாவைக் கனவு காணுவீர்.
பாழ்மை யில்லாப் படைப்பு உலகைக் கனவு காணுவீர்! 

இயற்கை வேளாண்மைக் கனவு காணுவீர்!
தரிசில்லாப் பசுமைப் பூமிக் கனவு காணுவீர்! 
பசுமை யெங்கும் பரவிய நிலங்கள்
கனவு காணுவீர்! 
நதிக ளெலாம் கைகோர்த் தோடிடக்
கனவு காணுவீர்!

வரண்ட பூமி வையம் காணாக் கனவு காணுவீர்.
பரந்த வயல்கள் பாரெங்கும் பரவக் கனவு  காணுவீர்.
பகைமை அறியாப் பாச உலகைக்,
கனவு காணுவீர்! 
சுயநலம் இல்லாச் சுற்றம் சூழக் கனவு காணுவீர்!

அச்சம் மறந்த உலகைக் காணக்
கனவு காணுவீர்! 
வீடுவாசல் பூட்டிடா விடுதலை காண
கனவு காணுவீர்! 
நடுச் சாமமும் பெண்கள் நடமாடிடக்
கனவு காணுவீர்! 
நகைப் பணம் ஆசை ஒழியக்  கனவு காணுவீர்! 

விலைவாசி ஆளுமை விவசாயி ஆளக் கனவு காணுவீர்! 
வேளாண்மைச் செருக்குத் தாளாண்மைக் கனவு காணுவீர்! 
வேலையிலா அவலம் ஒழியக் கனவு காணுவீர்! 
உழையாத் திருடர் உழைத்து வாழக்
கனவு காணுவீர்! 

இலவசச் சலுகை  ஏங்காச் சமூகம் கனவு காணுவீர்! 
விலையில்லா ஓட்டு விளங்கும் அரசியல் கனவு காணுவீர்!
பிச்சைக்கு அலைந்திடும்  பாவம் ஒழியக் கனவு காணுவீர்!
நடைபாதைக் குடும்பம் நாடறியா 
உண்மைக் கனவு காணுவீர்!

சமாதானம் சமத்துவம் உலகைக்
கனவு காணுவீர்!
சாதி மதப் பேதம் ஓழியக் கனவு காணுவீர்! 
அந்நியம் மறந்த ஒன்றியம் உலகை
கனவு காணுவீர்!
எல்லோ ரெல்லாம் பெற்றோ மென
கனவு காணுவீர்!

பாலியல் வன்கொடுமை வேறோ டழியக் கனவு காணுவீர்! 
கொலைக் களவுக் கொடுமைக் குற்றம் நீங்கக் கனவு காணுவீர்! 
தனியொரு மனிதர்கும் உணவிலா வறுமை ஒழியக் கனவு காணுவீர்!
பிணி யில்லா உலகம் பேறாய்க் காண கனவு காணுவீர்! 

வானங் கீழேவாழும் உயிர்கள் யாவும் உறவெனக் கனவு காணுவீர்! 
நல்லோர் வல்லோர் நாடாளும் உண்மை கனவு காணுவீர்!
காந்தி காமராசர் கக்கன் போன்ற
கடவுள்கள் ஆளக் கனவு காணுவீர்!
இளைய பாரதம் இதுவே சமயம்.
இப்போதே கண் விழியுங்கள்.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

Wednesday, 15 October 2025

கண்ணும் கண்ணும்

கண்ணும் கண்ணும்

கண்ணும் கண்ணும் கண்டும் பேசும்
கண்டவர் காண கண்களும் கூசும்.
இதயம் பேசும் இரகசிய மொழிகள்
உதயமாகும் விழிகளின் வழிகள்.

அக்கம் பக்கம் ஆரிருந் தாலும்
தர்க்கம் செய்யும் தாமிரு காதலும்.
குறிப்பால் அறியும் குறிப்புணர் பயிற்சி 
இறைவனுங் கூட இயற்றிடா முயற்சி..

உண்ணும் விழிகள் உணரும் மொழிகள்
கண்ணும் கண்ணும் கலந்திடும் வழிகள்
ஓசை  அறியா உணர்வின் குறிகள்.
ஆசை அறிந்த கனவின் .வரிகள்.

நேருக்கு நேரே சந்திக்கும் ஏக்கம்
நேருந் தருணம் கலந்திடக் கூச்சம்.
நோக்க நோக்கிக் கவிழ்ந்து திகைக்கும்
ஆக்கும் மொழிகள் மறந்தும் நகைக்கும்.

ஆசைகள் தூண்டி அளாவத் துடிக்கும்
பாசைகள் வேண்டிப் பழகிட நடிக்கும்.
ஓசைகள் தாண்டி ஒளிந்திட முடிக்கும்.
மசியச் சுணங்கி ஒருகண் படிக்கும்.

மௌனம் பேசி சகுனம் கூறும்
கவனம் கூறி கணணில் தேறும்.
கண்கள் கசிந்து தன்னிலை ஆறும்.
எண்ணம் மசிய ஏது ஊறும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

மெட்டு:பாலும் பழமும் 

இளைஞனே விழித்தெழு"!!

இளைஞனே நீ விழித்தெழு!!

இளைஞனே நீ விழித்தெழு.
எதிர் காலந்தான் அழைக்கிறது.
நாளைய சமூகம் நீயானது.
வேளை இதுதான் உணர்வானது.

எதிரே பார்  தெரிகிறதா.?
புதிராய் விடுகதை புரிகிறதா?
உன்ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃனைச் சுற்றி சதிவலைகள்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ மறைத்து விரிகிறதா?

உல்லாசம் சல்லாபம் எதற்காக?
ஃ கெடுவினை அதற்காக.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ நூறாக்கும் சூழ்ச்சிவலை.
ஃஃஃஃஃஅடிமைப் பழக்கம் அபாயம்
குடிமது போதை அழிமோகம்.
மயக்கிக் கொல்லும் சிற்றின்பம்
மயங்குதல் பாதகச் செயலாகும்.

உடம்பை இரும்பாய் கட்டிடனும்
நரம்பை வலிமைப் படுத்திடனும்.
சுவரில்லாத சித்திரமா!
தவறில்லாத செயல்த் திறமா!

உடம்பு தானே பிரதானம்
கடமை அதற்குள் சன்னிதானம்.
உடலும் அறிவும் வலுவிருந்தால்.
முடிக்கும் செயலும் தெளிவிருக்கும்.

காலம் வெகுதூரம் எதிரே
காத்துக் கிடக்கிற கனவு.
இலக்கைக் குறிவை,! ஓடு!
அடையும் வரைக்கும் ஓயாதே.

விதைக்கும் காலம் விதையாதது,
விளையும் காலம் விளையாது.
முளைக்கும் காலம் நோய்பட்டால்
வளரும் காலமே முடிந்து விடும்.

படிக்கும் நேரம் படித்திடனும்.
பயனுறும் காலம் கணித்திடனும்.
அறிவை ஏற்றி வளர்ந்திடனும்.
திறமை காட்டி உயர்ந்திடனும்.

தன்னை நம்பி முயன்றிடனும்
தன்னையே நம்பி வென்றிடனும்.
வலிமை தானே நம்பிக்கை
எளிமைத் தயர்வை அகற்றிடனும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

.


Sunday, 12 October 2025

திவினேஸ்

திவினேஸ்

ஒளி மயமான உன்னெதிர் காலம்
வழி நிசமான சரிகமப பாலம்.
பெயரின் பொருளும் அப்படிக் கூறும்.
முயன்றிட மேலும் உயரம் ஏறும்.

திவினேஸ் என்றால் கதிரொளியாகும்
கவினுன் பாட்டோ வானொலியாகும்.
சூரியன் போலே பிரகாச மாயம்
அரங்கம் ததும்பி அகிலம் பாயும்.

ஜீதமிழ் கண்ட திவினேஸ் நாதம்
ஜேதமிழ் வென்ற அமுத கானம்
அந்த மேடை அரங்கேற்ற மேடை
சொந்த மேடை சுழல்பூமி நாளை.

எத்தனை உயரம்  உயர்வாய் புகழை
அத்தனை கவனம் ஆள்வாய் வாழ்வை.
உலகம் உன்னைச் சுற்றிச் சுழலும்.
உறவும் உன்னைப் பற்றி வளரும்.

இனிப்பும் கசப்பும் கலந்த வாழ்வை
ஏற்றார்ப் போலவே சுவைத்து வாழ்க.
ஏழைக் கிழவனுன் தாதாவை சொல்லி
வாழ்வை உயர்த்து அவர்தோள் எண்ணி.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

பருவத் தூண்டல்

பருவத் தூண்டல்.

பருவ வயது உருகுது மனது
உருவம் விலகுது உள்ளம் பழகுது
அரும்பும் மோகம் தகைமை தவறுது.
விருப்பம் போதும் என்றே தேடுது.

வயது தானது வலிய முந்துது.
அறிவு தானது மெலியப் பிந்துது.
சந்திக்கத் துடிக்கும் பாலுணர் வாவது.
சிந்திக்கப் பக்கம் அறிய மறந்தது.

தன்பா லுணர்வைச் சுவைக்கத் தானது,
மறுபா லுணர்வைத் தூண்டி உசுப்புவது,
பெண்பால் ஆண்பால் அறிய இரசிப்பது,
இருபா லுணர்வை எண்ணி உருசிப்பது.

கன்னி இரசனை காதல் முயல்வது,
பின்னி உறவை ஆவல் உணர்வது.
இயல்பின் மர்மம் தெளிய முனைவது,
அயலுணர் ஆர்வம் விளங்க விழைவது.

பேச்சுக்கு முன்னே மூச்சு முந்துது. 
மூச்சுக்குப் பின்னே  வார்த்தை பிந்துது.
காற்றுத் தானது காதல் பேசுது
கதப்பில் தானோ இருமுகம் கூசுது. 

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Sunday, 5 October 2025

அப்பாவைப் போல

சுமைதாங்கி.

அப்பாவைப் போல-- அவர் 
அன்புக்கும் மேல 
யாருனு சொல்ல--உலகில்
அவர் போல் இல்ல.
சுமையென எண்ணா--குடும்பம்
சுமக்கும் அப்பா
சுமைதாங்கி தான்னு--உன்னை
சொன்னால் என்ன தப்பா.

நானும் ஏனோ வீணே வம்பு
சேட்டைச் செய்யும் போதிலே,
வானம் மின்னிஇடியும் இடிக்கும் 
கோவம்‌ போலச்,சும்மா நடிப்பார்.
அடியும் அடிப்பார் அதட்டிப் பிடிப்பார்
கண்டிப்ப தாக என்ன லனுக்காக.
அப்புறம் பெய்யும் பாசமழை போல் அன்பைப் பொழிவார் நிசமென் மேல்.

தட்டில் சோறை தானே பிசைந்து 
தடவிக் கொடுத்து ஊட்டுவார்.
அடித்தக் கையை தானே கடிந்து 
அழுவார் பின்னே வருந்தி நொந்து..
பிள்ளை என்மேல் கொள்ளைப் பாசம்
உள்ளம் கனிந்து செல்லம் பேசுவார்.
மெல்லம் மொழியும் செய்யும் சமரசம்
சொல்லு மென்னகை பெய்யும் கனிரசம்

வேளை தவறி உண்ணாமல் வெளியே திரிந்தால் உதையே ஒளிந்தால் பயமே.
அந்தந்த வேளை அந்தந்தச் செயலை
அமையச் செய்தால் சரிதான் நயமே.
பசிதாங்க மாட்டான் பிள்ளை என்றே
பதறிப் பதறித் தேடுவார் அழைத்து
கூப்பிட என்னைத் தாயிடம் சொல்லி
சாப்பிட வைப்பார் பக்கம் அமர்த்தி.

தோளில் சுமந்து உயர்த்திப் பிடித்து,,
தூரம் பாரென உலகைக் காட்டி
நான்தேடா உலகை நீகாண வேண்டும்
நீகண்ட உலகம் நான்வாழ வேண்டும்.
என்றே என்னைத் தூக்கி  ஏற்றி
தன்னைத் தாழ்த்தி என்னை உயர்த்தி
எண்ணம் வென்று உச்சி முகர்ந்தார்.
பின்னே மெச்சி முன்னே மகிழ்ந்தார்.

இருக்கும் போதவர் இம்சை என்றேன்
இல்லாத போது இழப்பு என்றேன்.
பறந்த பின்னே திருந்தி அழுதேன்
இழந்த பின்னே உணர்ந்து தொழுதேன்.
வெற்றிட அருமை விதியிடம் கேட்டேன்.
முற்றிய ஞானம் முதுமையில் படித்தேன்
நிழலின் அருமை வெயிலில் அறிந்தேன்
பழமைப் பெருமை நிலைமை புரிந்தேன்.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
 










Saturday, 4 October 2025

கலை வாழுந்தமிழகம்

தமிழகம்.

கொடையர் ஆண்ட 
படை நாடு வென்றோம்.
கடைக்கோடி மனிதரும் 
கனம் வாழக் கொண்டோம்.
எல்லோரும் எல்லாம் 
இயன்றோம் செல்வம்.
தமிழர் தனிக்கலை
தரணியில் படைத்தோம்.

வள்ளுவன் மறைமொழி
உள்ளம் நிறைத்தோம்.
நல்லவர் வல்லவர் 
வாழ்வியல் படித்தோம்.
வாழ்ந்தது வாழ்ந்து 
வழிமுறை செய்தோம்.
ஔவை செப்பிய 
செவ்வழி நடந்தோம்.

வியந்திடச் செய்தே 
நயங்கலை உயர்ந்தோம்.
முயன்று இலக்கியம்
முன்னணி சென்றோம்.
கம்பன் இளங்கோ
கவிவளம் கண்டோம்.
வென்றும் நின்றோம்
விந்தியம் கடந்தும்.

சோழர் சேரர்
பாண்டியர் வாழ்வியல்
ஆண்ட அருமை
வாழ்ந்த பெருமை.
இமயம் வென்றும்
இயல்பில் வாழ்ந்தோம்.
சமயம் என்றும்
சமத்துவம் என்றோம்.

செம்மொழி மேன்மை
எம்மொழி ஆண்டோம்.
தமிழால் இனித்தோம்
அமிழ்தம் சுவைத்தோம்.
மொழியின் தொன்மை
அழகிய தன்மை.
உலகின் ஒருமை
விலக்கினோம் சிறுமை.
விளங்கும் அமைதி
விளக்கி வாழ்வோம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


கோடைக் காலம் வந்தது.

கோடை வந்தது

கோடைக் காலம் வந்தது.
வாடைக் காற்றும் ஓய்ந்தது,
குளிர் மறைந்து வெந்தது,
குளம் வற்றிக் காய்ந்தது.

நெருங்கி வரும் சூரியன்,
நெருப்பை வீசிக் கொட்டுது,
உருகிக் கரையும் பனிமலை
உலகைப் பயங் காட்டுது.

மரங்கள் இலை நீக்குது,
மண்ணின் ஈரம் காக்குது
மாசடைந்த வானமோ-
மோச மாகிக் கிழியுது,

பருவ நிலை தப்புது,
பாச னங்கள் குறையுது,
பெய்யாமல் பொய்க்குது,
பெய்தும் வெள்ளம் 
அழிக்குது

பறவை யெல்லாம் பறக்குது,
பசுமை தேடி அலையுது,
வறுமைப் பட்ட பூமியோ--
வறண்டு சுருண்டு வாடுது..

மனிதரே உணருங்கள்,
மாசு போக்க உதவுங்கள்,
வெப்பந்  தாங்க முடியல,
வேகுதிந்த உலகமே!

வாகனங்கள் புகையுது.
வானம் மாசு நிறையுது.
ஆகாயம் சூடேறி
அண்டம் சூழல் மாறுது.

மெஞ்ஞானம் எச்சரிக்கை
விஞ்ஞானம் உச்சறிக்கை.
எஞ்ஞானம் ஏது செய்யும்?
அஞ்ஞானம் அய்யோ பாவம்!

வீட்டுக் கொரு மரம் வளர்ப்போம்--அது
நாட்டுக்கும்  உலகுக்கும் குளுகுளுப்பு.
காடுகளுக்குள் வீடுகள் அமைப்போம்.
குளிர் சாதனங்களை ஒழிப்போம்.
ஓசோனைக் காத்து உயிர்களை வாழவைப்போம். 

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.







இறைவன் ஒருவனே முதலாளி.



வாழ்கத் தொழிலாளர்.

வாழ்க்கை என்பது போராட்டம்.
வாழ்ந்திடும் நாளே களமாகும்!
வாழ நினைத்துப் போராடு.
வாழ்ந்திட நித்தம் களமாடு.

வயிற்றின் அளவோ ஒருச்சாணே!
உயிரின் உழைப்பே அதுதானே.
உழைக்கும் காலம் நீரோட்டம்.
பிழைப்பே உயிரின் ஏரோட்டம்.

தொழிலைத் தொழுதால்
அருள் செய்யும்,
தொழில் செய்தாலே 
பொருள்செய்யும்.
தொழில் அறிந்தோரே 
தொழில் முனைவார்.
தொழில் ஆள்வோரே
தொழிலாளர்.

ஆண்டவன் ஒருவன் முதலாளி
அனைவரும் இங்கே தொழிலாளி. 
ஆலங்குடியார் பாடி வைத்தார்.
வாழும் வழிமுறை கூறி வைத்தார்.

கொ.பெ.பி.அய்யா







Thursday, 2 October 2025

கர்மயோகி காமராசர்.

கடைசிக் கருணை!!

காமராசர் பிறந்தநாள் வாழ்தது
(15/7/1903-----2/10/1975)

கடைசிக் கருணை!!

காமராசர் பிறந்தநாள் வாழ்தது
(15/7/1903-----2/10/1975)

கடைசிக் கருணையாம்
காமராசர் புகழ் வாழ்க!
ஊழலற்ற ஆட்சி தந்த
உத்தமர் புகழ் வாழ்க!

எத்தனை எத்தனை தானங்கள்,
அத்தனை அத்தனை யோகங்கள்,
கண்தானம் மிஞ்சிய தானம் 
கல்வித் தானம்

படிக்காத மேதையவர்
பண்பாளர் புகழ் வாழ்க!
பசிமறந்தப் பாடசாலை
பகலுணவுப் புகழ் வாழ்க!
பசுமைத்தமிழ் நாடுசெய்த
பாரிமகன் புகழ் வாழ்க!

இறுதி வரை வீடில்லாத
ஏழையவர் புகழ் வாழ்க!
அரசியல் துறவியவர்
அறவாழி புகழ் வாழ்க!

தூற்றினோரும் போற்ற வரும்
தூயரவர் புகழ் வாழ்க!
ஏற்பான தொண்டதனின்
இமயமவர் புகழ் வாழ்க!

பிறர் மனம் வருத்தாத
பெருமையவர் புகழ் வாழ்க!
இடித்தோரையும் ஏற்கின்ற
இனியாரவர் புகழ் வாழ்க!

சுயநலம் பேணாதச்
சொக்கதங்கம் புகழ் வாழ்க!
சொந்தமே மக்களென்ற
சொந்தக்காரர் புகழ் வாழ்க!

தொண்டே வாழ்வான
தொண்டரவர் புகழ் வாழ்க!
நாடன்றி வேறொன்றும்
நாடாராம் புகழ் வாழ்க!

நாட்டு வளப் பூகோளம்
நடந்தறிந்த புகழ் வாழ்க!
வீடொன்றும் நாடாராம்
விந்தை நாடார்
 புகழ் வாழ்க!

விருதுபட்டிக் கிராமத்தின்
விருது அவர் புகழ் வாழ்க!
சிவகாமி குமாரசாமி
கர்மயோகிப் புகழ் வாழ்க!

ஜூலை  பதினைந்
துதித்த
கருஞ்சூரியன் காமராசர் புகழ் வாழ்க!
ஏழையர் வாழ்வுயர்த்திய
ஏழை மகன்புகழ் வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.






மகாத்மாக்கள் மரிப்பாறில்லை

மகாத்மாக்கள் மரிப்பதில்லை.

தந்தை இழந்தோமென
தவிக்கும் மானுடமே!
உந்தை அமைதியில்--என்றும்
உன்னிலே வாழ்கிறார்.

புனிதன் ஏசு போன் றோரும்,
புத்தன் தோன்றலின் பின்னவரும்,
மனிதம் துலங்க வந்த மகான்கள்--பிறவி 
மாறி மாறி அவதரித்து ஊறினர் .

காந்தி மார்டின் மண்டேலாவும்
ஏந்தி வந்த அவதாரங்களாவர்.
அவரவர் வேலை அவரவர் முடித்தும்--ஓய்வாய்
அமரம் ஆனோர் மீண்டும் வருவர் அவசியத்தில்.

மகாத்மாக்கள் மரிப்பாரில்லை
மனிதம் மரிக்கப் பொறுப்பார் இல்லை.
எங்கோ என்றோ தோன்றாமல் இல்லை--வரவு .
என்றோ எப்போ அறிவார் இல்லை.

அக்கிரமங் கூடி அத்து மீறுது.
உக்கிரம் ஏறி பரமனைத் தூண்டுது.
இயற்கை சீறி எச்சரிக்கை கூறுது.
எதையும் மீறினால் இறைவனே இறங்குவார்.

கொ.பெ.பி.அய்யா.

Friday, 7 February 2025

அம்மா உன் கைவாசம்......

அம்மா உன் கைவாசம்.

அம்மா உன் கைவாசம்,
ஆவின்பால் நெய் வாசம்.
ஆறாத உன் பாசம்,
ஆகாயம் கீழ் தேசம்.

விட்டுச் சென்ற அன்னை நீ
விதிப்படியே போனாயோ!
தொட்டில் பாட்டுப் பாடி நீ
தூங்க வைக்க வருவாயோ!

கட்டில் துணை .
மனையாளும்,
கண்ணீரைத் துடைத்தாலும்,
கட்டையிது வேகும் மட்டும்,
அன்னை உன்னை 
மறந்திடுமோ!

தொட்டில் இன்று ஆடுதம்மா,
தூலி தூலி பாடுதம்மா,
நாளெல்லாம் உன் பாட்டே
நானும் தூங்க அதைக் கேட்டே.

உன் சேலை வாசந்தான்;
என் மேலே பாசந்தான்.
உன் பேரன் என் பிள்ளை
உடன் பேசி தூங்கு றானோ!

அம்மாநீ வாழ்ந்த வீடு,
சும்மா ஆண்ட சொர்க்கத் தோடு,
இன்றும் அந்த நினைவோடு;
இல்லை ஒரு குறை பாடு

கொ.பெ.பிச்சையா.






Thursday, 30 January 2025

கனியும் பருவம்

கனியும் பருவம்.

சின்னச்சின்னக்குழந்தையாம்
அன்ன வண்ணக் கிண்ணத்தில்.
திண்ணையொன்றில் ஓடியாடி...
அன்னையவள் சோறூட்ட.......
அந்தவேளை நானுமே
அவ்வழியே சென்றிட...............

முன்னப்பின்னே அறியாத.......
என்னைப்பார்த்துச்சுட்டியே
"தாத்தா" என்றே விளித்தது..........!

"மாமா" என்றும் சொல்லவில்லை.
"அண்ணா"வென்றும் தோன்றவில்லை.
"தாத்தா" எனக் கண்டதும் எப்படி?

வீட்டுக்குத் திரும்பினேன்.
வீட்டாளை வினவினேன்.
காட்டியது என்னடி ...........
கண்டு சொல் என்றதும்
நாணத்தில் கோணினாள்
"நானெப்படிச் சொல்லுவேன்"
என்றாள்

"தோணவில்லை அப்படி
ஆனாலும் குழந்தையோ
அறியாது பொய்யுரை!"
என்றாளே என்னவள்
சென்றதென் கனவுகள்!

என்னவிது விந்தையென
கண்ணாடி முன்னின்று
என்னை நான் தேடினேன்!
வாலிபம் முடிந்த அந்த
வரலாறும் புரிந்தது!
வயதான பதிவுகளும்
வளருவதும் தெரிந்தது!

அங்கங்கு வெள்ளைமுடி
சிங்காரமாய் ஒளிர்ந்தது!
முத்தலாகும் இளநியாக
முக அழகும் தளர்ந்தது!

தாடையது சாடையாக
தாழ்ந்து நிலை சொன்னது!
"கோடையின்னும்
நெருங்கவில்லை!
கூடி மகிழத் தடையுமில்லை!
முத்தினால் சத்துத்தான்!
வித்தைகள் பத்திரம்!
விளையாடு நித்தமும்!"

கனியும் பருவமோ!
இனித்திடும் இன்னுமோ!
அனுபவ முதிர்ச்சியோ!
அதிலென்ன அதிர்ச்சியோ!
இளமைதான் முத்தியதோ!
வளமையும் கூடியதோ!
வாலிபம் என்பதெல்லாம்
போலிதான் புரிந்ததோ!

கொ.பெ.பி.அய்யா.

சிம்மம் குரலுக்கு அஞ்சலி.

சிம்மக் குரலுக்கு அஞ்சலி!

மாலைச் செய்திகள்
மனம் அழுகச்செய்தது!!
மாலை வெய்யிலாய்
மயங்குமென நம்பினேன்
காலைச்செய்திகள்
கண்ணீரில் நனைந்தன!!

ஆலய மணியோசை
அடங்கியதோ அய்யகோ!
ஆண்டவன் கட்டளையோ!
ஆண்ட குரல் ஓய்ந்ததோ!

ஆறுமனமே ஆறு என்றே
அழைத்தானோ அவனடிக்கே!
பாடும் பாட்டில் மயங்கியதோ!
பரலோகம் கொண்டதோ!

உலகை விட்டுப்போனாலும்
உந்தன் குரல் எம் சொந்தம்!
எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்
மெட்டுக்குர்ல் கேட்டினிக்கும்!

தமிழ்த தாயும் அழுகிறாள்!
தனித் தமிழ்க் குரலோனே!
தமிழ் அழகு உச்சரிப்பும்
அமிழ்த மொழி கேட்பதெப்போ!

நெற்றி நிறை பட்டையிட்டு
நேர் வரை நேயம் தொட்டு
பற்றி நல் மனித வாழ்வு
பண்புத்தமிழ் மணக்க வாழ்ந்தாய்!

விருதுகள் அத்தனையும்,
விரும்பித்தானே வந்தன,
பெருமைகளும் பெற்றன,
பின்னும அவை வாழ்ந்தன!

சௌந்தர ராஜனே!
சௌந்தர்ய வாச்னே!
சௌண்டுக்கும்  ராஜன் நீ
சாவதும் நீ  இல்லை!
உயிருடல் சொந்தக்காரன்
ஒப்பந்தம் செய்தபடி
உயிரதை மீட்டாலும்
உடலைப் போட்டாலும்
குரல் அவன் சொந்தமென
கொண்டு செல்லக் கூடுமோ!

இறைவனடி சேர்ந்த நீ
இளைப்பாரி சாந்தி பெறு!
மறையாது உன் குரல்
மண்ணும் விண்ணும் ஒலிக்குமே!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

















காலைப் பொழுது.

காலைப்  பொழுது.

சின்னஞ் சிறு பொழுதது,,
சேவல் கூவி எழுப்புது.
கண்ணங் கருமைக் கரைகிறது
கதிரவன் வரவு வளர்கிறது.

ஊதல் காற்று இதமாக,
உலவ வருகுது பதமாக,
பறவைகள் கூடிப் பாடியே
பரவும் வரவும் செய்கிறது.

பனியில் இரவு நனைந் துதான்,
பாவம் முழுதும் 
குளிர்ந்துதான்!
மெல்லப் போர்வை யிருள் விலகும்.
கள்ளத் தனமாய் கதிர் நுழையும்.

மங்களப்  பாவையர் கூடி
மஞ்ள்  பூசி நீராடி,
தங்ககள் வீடு தலை வாசல்
எங்குங்கோலம் வரைகிறார்.

ஆழ்ந்த நல் லுறக்கமோ!
ஆதவன் கண் சிவந்தான்.
வாழ்வாதாரம் தேடும் பாவை
வழியேநின்று வரவேற்போ!

கொ.பெ..பி.அய்யா.









Wednesday, 29 January 2025

பிறந்த நாள் வாழ்த்து. ஐக்

பிறந்த நாள் வாழ்த்து.(பொதுவாக)

உலகம் பிறந்ததும் உனக்காக.
உன்னை ஈன்றதும் அதற்காக.
பழகும் மனிதம் உறவாகசெய்
பந்தம் அதனில் ஒன்றாக.

ஒருதாய் பிள்ளை நாமென்போம்.
ஒன்றே நமக்குள் மரபென்போம்.
இயற்கை ஒன்றே இறையென்போம்-இங்கு.
எல்லாம் நமதே மொழியென்போம்.

சுழலும் காலம் உனக்காக
சுழட்டும் நாட்கள் நீ வளர்க!
நாளை என்பதும் உனக்கல்லநல்ல
நாளும் இன்றே நீ தொடர்க!

உணவு என்பது உடலுக்கு
உடலும் வளர்வது உயிருக்கு.
உயிர் என்பதும் உழைப்புக்குநீ
உழைப்ப தென்பது உயர்வுக்கு.

வேலை தேடல் வீண்வேலை.
வேலை கொடுப்பது உன்வேலை.
நாளை நீயொரு முதலாளிஉன்
ஆலையி லாயிரம் தொழிலாளி.

வாழ்த்தும் என்னை நினைத்திடுக!
வாழ்வில் உன்னைழ்ஜ் ழ் பஸ் ல்ஸன் வளர்த்திடுக!
கைகளை நம்பி செயல்பச்டுக!
காலம் உந்தன் கைவசமே!

கொ.பெ.பி.அய்யா.



செம்மொழி வாழ்த்து.

செம்மொழி வாழ்த்து.

முதலொலியாம் முத்தாம்வளர்மொழியாம்வாய்த்தயிருகண்ணாம்கருவிழியாம்,காலமாம்! -கன்னல் இனிமைவளமைஇளமைவழமை தனித்தசிறப் புள்ள தமிழ்

பிறக்கும் பொழுதே பிறக்கும் ஒலியில் பிறக்கும் உறவும்அம் மாவாம்! - சிறப்பிதுபோல் உண்டோ பிறமொழி ஒன்றிலுமே சொல்லுக! கொண்டதும் செம்மொழி தமிழ்.


அறம்பொரு ளின்பம் அதன்பின் பெறும்பேறும் அன்ன பெருமை அனைத்தும்திறமாய் அமைந்தும் வளமாய் நிலமதில் வாழும் அருமைத் தமிழே சிறப்பு

பன்மொழி ஏற்றுப் பதித்த இலக்கியங்கள் தண்பொலி வேற்றி வளர்ந்துமேதன்னிலைத் திண்ணமும் தேறியும் முன்னிலைப் போற்றியும் செழுந் தமிழ் வாழ்க!வாழ்க!



கொ.பெ.பி.அய்யா.

மெய்யன் காந்தி.

மெய்யன் காந்தி!

அண்ணலாம் தயாபன்
அகிலம் புகழ் வியாபன் -முக்திவழிப் பக்தியன்னார்
மெய்யன் நெறிக் காந்தி மகான்.

உயிர்கள் மேல் உயர் நேசன்.
உலகெலாம் உணர் வாசன்.
தூய்மை வாழ் இராம தாசன்
தாய்மை போல் ஆண்ம ராசன்.

வாய்மைக் காத்து வாழ்ந்தவர்
நேர்மைப் பூத்த நிமலனவர்.
சத்தி யத்தின் புத்தனவர்
உத்த மத்தின் பக்தனவர்.

அடிமைத் தளை அறுத் தாரவர்
அந்நியத்தை மறுத்தா ரவர்.
அகிம்சை வழி நின்றா ரவர்.
அற வாழ்வு வாழ்ந்தா ரவர்.

கத்தி யில்லா யுத்தம் ஒன்று,
சத்தி யத்தின் வழி நின்று,
வெற்றி கொண்ட வித்தகர் என்று;
விண் ணதிர்ந்த உண்மையும் ஒன்று.

புத்தன் ஏசு நபிகள் போன்றோர்,
உத்தம் காந்தி அவதார சான்றோர்,
மனிதம் தவறிய அவசரக் காலம்,
புனிதர் தோற்றம் ஜெயந்திக் கோலம்.
















வொரு ராசன்`
செந்நாப் பொழி
மொழி ஏசன்
உள்ளும் ஊறும்
இனிய சொலைக்
கூறும் நலம் கொள்வார்
ஆரே அண்ணல் தானே!

மண்ணை நேரை
வெல்லலுஞ் சீரை
வாற் கொண்டெழுவுஞ்
சினப் போரை-தனை
நேரில் மோதும்
தனிச் சேனை
முன்னே தானே
ஆனே எனக் கோனே!

இல்லை வேறை
ஒத்தும் தாரை.
வேர்க்கொண் டெழுந்து
வினை தீர யவர்
சத்தி யம்சோ
தனைத் தானே
சாந்தி காந்தியம்
நன்றே யது வென்றே!

பத்துக் கெலாம
அயல் தேடும்-நித்தம்
அலைவ தேனோ!
நிலை தானோ!
சுய இராட்டைப்
போல் சுழன்று
ஆன்மக் காந்திநின்று
வாழ்வீர் வாழ்ந்தாவீர்!

முல்லைச் சீரை
ஒத்த ஆடை--திரை
இல்லை மேலே
ஒரு சீலை
வெள்ளைத் தானும்
வினை பேணும்
நேர்மைச் செம்மை
அய்யே-நீ-மெய்யே!

விண்ணிற் தொலைந்ந
விளை நாசம்.
மன்னா நிலைப்
புவித் தோசம்
தகா மோசம்கொண்டும்
பேதம் செயும் வதை
தீரும் நலம் ஆகும்.
நாடே--கேள் இப்போதே!

எண்ணிற் பெறாத
உயர் வாசன்--பெற்றப்
புதல் வரான
கனம் பேசான்.
சுயம் போற்றத்
தான் மறந்து
தேயம் தன்னிறைந்த
தேசன்-புவி-தாசன்.

மண்ணிற் கிசைந்த
மன வாசன்.
கண்ணா னிணைப்
புவி ராசன்?
நேசன்-மீண்டும்
வர வேண் டுமே
நாளு முனைத் தேடும்
மோகன் இனித் தாயன்

கொ.பெ.பி.அய்யா.  









விளையும் பயிர்.

விளையும் பயிர்!

அன்று குழந்தையாய் அன்னை மடி சிரித்திருந்தான்.
இன்று செல்வத்தாய் அவன் மடியில் சிரிக்கின்றாள்.
தத்தித் தவறி விழுந்தெழுந்து எழுந்திட முயல்கின்றான்--இன்று
புத்திக்கு எட்டுந் தூரம் 
 போயுமே வருகின்றான்.

விளைகின்ற பயிரொன்று முளையிலே தெரியுமே!
நுழைகின்ற வழி நன்றே 
விழியினிற் புரியுமே!
தாளிலே தங்கம் மறைத்து,
ஒளித்துமே வைத்தாலும்:
தாளைத் தூரம் தள்ளி விட்டு
தங்கத்தைத் தேர்ந்திடுவான் .

தாளினைத் தள்ளி விட்டுத் தங்கம் எடுப்பான்.
தாய்க்கதை மாட்டிவிட்டு 
முத்தங்கொடுப்பான்,
தந்தையவர் இறந்தாலும்,
தாயவள் வளர்த்தாலும்,
முந்தையவர் பேர்விளங்க ;விந்தையே செய்கிறான்.

அசைவுகள் கவனித்தான் அர்த்தங்கள் தேடினான்.
இசையாதச் செயலையும்
ஏனெனத் தேடினான்.
எழுப்பிடும் வினாக்களை 
என்னென்று ஆய்கிறான்.
மழுப்பிடும் பதில்களை 
மறுவிடை வினவுகிறான்

பள்ளியிற் பயின்றதை 
உள்ளெடுத்து உணர்கிறான்.
உள்ளென்ன இருப்பதோ!உள்ளமதில் தேர்கிறான்.
அதுவென்ன இதுவென்ன விளங்கிட முனைகிறான்.
அறிவினைப் பெருக்கவே 
அறிந்திடத் தேடுகிறான்.

எதையுமே எடுப்பிலே 
ஏற்கவுந் துணியமாட்டான்.
அதையுமே அவனாய்ந்து 
ஐயமின்றித் துணிகிறான்.
கூர்மையாம் அறிவினைக் 
குழந்தையிற் கொண்டவன்.
குழந்தையின் தெளிவுக்கே தந்தையும் விடுகிறான்.

ஆர்வத்தின் விழிப்பிலே 
அவனறிந்து கண்டவன்.
நேர்மையாம் நெறியிலே 
வழியினைத் தேர்ந்தவன்.
வேலையைத் தேடாமல் 
வேலைகள் தருகிறான்.
சளைக்காமல் உழைப்பிலே கோபுரமாய்  உயர்கிறான்.

நூறான குடும்பஙகளின் சோறாகித் தாயுமானான்.
பேறு பெற்ற தாயவளின் 
பிள்ளையாய்ப் பேரானான்.
தன்திறன் தன்னை நம்பித் தன்னறிவில் உயர்கிறான்.
தந்தையவன் தவப்பயனால் விந்தையாகிவிளைகிறான்.

இரண்டு பத்து வயதினிலே 
எழுகிறான் முனைகிறான்.
இன்றுவரை வென்று உச்சி
நின்றுமே சிறக்கிறான்.
நாலு பத்து வயதுக்குள் 
நாடுகளைக் கற்கிகிறான்.
நாழிகையும் வீணின்றி 
தேடித்தேடி வெல்கிறான்.

இன்னும் எட்டுந் தூரந்தொட விண்ணோக்கி
விழைகிறான்.
இரவு பகல் என்றறியா 
எந்திரமாய் உழைக்கிறான்.
நடை பழகும் நாளிலேயே 
விடை தேறிக் கூடினான்.
நாளெல்லாம் ஓடுகிறான் 
நடக்கவும் மறக்கிறான்.

குமாரைப் பெற்றவரின் 
குலதெயவத் தவப்யனோ!
சமரிட்டு வாழ்ந்தக் கதை
சரித்திரம் ஏற்றினானோ!
உதாரணப் புருசனாய் 
ஊர் மெச்ச வாழ்கிறான்!
சதமாகச் சமூகத்தின் 
சாதனை செழிக்கிறான்!

வாழ்க அவன் புகழ்கண்டு, 
வளர்கவே உழைப்பென்று!
வீழ்கவே வறுமை விதி.
ஆள்கவே பெருமை மதி.
சூழ்கவே வளமெங்கும் 
சுதந்திரக் காற்றுண்டு!
வாழ்கவேவாழ்கவே
வாடாத நலங்கொண்டு!

கொ.பெ.பி.அய்யா.





















தென்றல் விடு தூது.

தென்றல்விடு தூது!!

தென் திசைத் தென்றலே
தேன் சுமந்து சீதனமோ!
தமிழ் அவளைக் காணவே.
தனியாகப் பயணமோ!.
வட திசை நோக்கியே
வழக்க மான உலாவாமோ!
பொதிகை மலைப் புறப்பட்டு.
போகும் வழி தூரமோ!

அகத்திய முனிவ ரவர்
ஆசிரம சேவ கனோ!
இகத்தினில் தழிழ் தந்த
இறைவனின் ஏவலனோ!
சுகம் தரப் பிறந்தநீ
சுரந்து வரும் ஆவலனோ!
யுக நலமாய் தமிழுக்கு
உகந்த சுகக் காவலனோ!

தாமிர பரணி ஆற்றில்,
தலை மூழ்கிக் குளித்துமே,
தேமதுர தமிழ் அணங்கை;
தேடி நீயும் செல்வாயோ!
குற்றாலச் சாரலிலே
குளிர்ந்து நீயும் சுகமாக,
அருவி யெலாம் நீராடி;
அப்புறமே தொடர் வாயோ!

நெல்லையில் அல்வாவும்,
நீ வாங்க மறப்பாயோ!
எல்லையில் காந்திமதி:
முல்லை சூடித் தொழுவாயோ!
நெல்வயல் நீண்டவழி,
நெடும் பயணம் கடந்துமே;
செல்வனவன் செந்தூரான்:
சேவடிகள் தரிசனமோ!

அலை வாயில் கடலாடி,
ஆண்டவனைக் கலந்தாடி;
அங்கிருந்தே குமரியவள்:
தங்கவொளி சேவிப்போ!
செங் கதிரோன் தங்கியே,
தூங்கி யெழும் காட்சியோ!
பொங்கும் நல் புத்துணர்வோ!
அங்கந் துள் அகமகிழ்வோ!

உவரி வந்து மாதாவை'
உளங்கனிந்து செபித்துமே,
காயல் பட்டண தர்காவிலே,
காலாற்றி தொழுதுமே!
வெற்றிலைத் தோட்டங்கள்,
சுற்றியும் சுவை மணந்து,
முற்றிய மா பலா வாழை,
பற்றி உடன்  கொண்டுவா!

ஆழக்கடல் தூத்துக்குடி,
ஆழத்தில் முத்தெடுத்து,
ஈழக்கடல் வீரத்தமிழ்,
வாழ்த்தி நீ துணை நாட்டி,
வாழுந்தமிழ் சிதம்ரனார்,
விட்ட கப்பல் தடம் பார்த்து,
கீழக்கரை மீனவரை,
கண்டுங் காயம் ஆற்றி வா!

பாதை யெலாம் உப்பளங்கள்
பரவி யெங்கும் பளபளக்கும்.
வேதனையில் தொழிலாளர்
வெந்துப் புண்ணில் வருந்துவர்.
ஊதி மெல்லப் புண்ணாற்றி,
உழைக்கும் வர்கம் தேற்றியே;
நாதி நீ அவர்க்கு வழி,
நல்லூக்கம் ஊட்டி வா!.

வரும் வழி மணியாச்சி,
வாஞ்சி வீரப் பேராச்சி..
கடம்பூரு போலி வாங்கி
கடந்து வா கொல்லநகர்.
கொல்லம்பரம்பு நல்ல நீர்,
குடிக்க சுவை வெல்ல நீர்;
குறுக்குச்சாலை சேவு திண்ணு:
குடித்துப்பார் வாய் மணக்கும்.

சுற்றியுள்ள ஊரெல்லாம்,
சுதந்திர விளை பூமி.
பற்றி வா தேசப்பற்று,
பரப்பியே தேசமெல்லாம்.
பாஞ்சாலம் ஓட்டப்பிடாரம்,
பக்கமே எட்டையபுரம்,
வ.உசி கட்டபொம்மன்;
வாழும் பாரதி அறிந்துவா!

கர்மவீர்ர் காமராசர்,
கண்ட ஊர் விருதுநகர்,
பரம ஏழை பாதம் தொட்ட;
பழைய மண் எடுத்துவா!
தென் தமிழ் நாடெல்லாம்,
தேடித் தேடிக் கண்டு வா!
சுதந்திர சுவாசமாய்,
இதமாகிப் பரந்து வா!

பக்கம்தான் மதுரையும்
பழந் தமிழ் சங்கத்தூர்.
நிற்குமே நாவில் சுவை,
நிற மல்லி இட்லி துவை.
திக்கெல்லாம் கோபுரங்கள்,
தேவி மீனாள் மகிமைகள்.
சொக்கனாதன் தடாகத்தை,
உக்கிப் போட்டு மூழ்கி வா!

ராமநாதன் பூமிகண்டு,
சேமநாடு சேதுபந்தம்,
தஞ்சை மண் தாண்டியும்
தமிழருமை கண்டாயோ!
காவிரியில் தாகமாற்றி,
கல்லணை கவியேற்றி,
பாவிரிக் களஞ்சியங்கள்:
பார்வையிட்டும் மகிழ்ந்தாயோ!

தஞ்சை நிலம் கொஞ்சி நீ!
நஞ்சை வளம் விஞ்ச நீ!
எஞ்சி வாழும் தமிழெ ரெல்லாம்,
மிஞ்சவே நலம் வாழ்த்து
இன்னும் மெல்ல முன்னே வா!
அன்னை வேளாங் கன்னித் தாய்,
விண்ணுயரக் கோபுரத்தாள்:
வேண்டும் வரம் வாங்கி வா!

பெரும் மழை பெய்யும் பூமி,
வரும் புயல் காக்கும் சாமி,
நாகூர் தர்கா வாழும்,
நாகூர்‌ ஆண்டவர் தீர்த்தம்,
வேண்டிப் பெற வினை தீரும்.
தாண்டிநீ வரவர 
திருவாரூர் தேரு வரும்.
திருவாசகப் பெருமானின் திருத்தலங்கள் கூடி வரும்.

திருவரங்கம் கண்டாயோ!
பெருமாளைத் தொழுதாயோ!
கோபுரத்து அழகதனைக்,
கூவி நீ புகழ்ந்தாயோ!
வீர நாச்சி பூமிகண்டு,
தீரன் சின்ன மலை புகழ்ந்து;
கொங்கு நாடு தமிழ் மணந்து:
தெங்கு நீர் பருகு  வாயோ!

வரும் வழி ஈரோடுதான்,
வாசம் மஞ்சள் மணம் வீசம்,
சுயமரி யாதைத் தந்தை,
பெரியாரின் புகழ் பேசும்.
சேலத்து மாங்கனிக்கு
காஞ்சிபுரம் பட்டுத் தந்து
கடமை கண்ணியம் கட்டுப்பாடு,
அறிஞர் வழிப் பற்றினாயோ!
அவர் புகழ் பாடினாயோ!

சென்னைக் கோட்டைத் தலைவாசல்,
முன்னைப் போர் வியந்தாயோ!
முன்னைப் புகழ் கூவநதி,
இன்னை வாசம் நுகர்ந்தாயோ!
வங்கக் கடல் மெரினாவில்,
சிங்கமவன் அண்ணாவுடன்,
தங்கமகன் எம்ஜியாரும்:
கண்ணுறங்கத் தாலாட்டோ!

நாடெல்லாம் சுற்றி நீ!
காடெல்லாம் பறந்தாயோ!
நதியெல்லாம் ஆடி நீ!
விதி யொன்றும் புரிந்தாயோ!
விவசாயப் பூமி இது,
அவசரத் தேவை அது,
இணைத் தெல்லா நதிகளை;
அணைகளுக்குத்  திருப்புவோம்.

போதுமோ சுற்றுச்சூழல்,
பூமியிது வாழ்வதற்கு!
எதிர் காலம் என்னாகும்!
என்பதும்நீ ஆய்ந்து சொல்.
பசுமை பரந்து வளமாக,
வறுமை நீங்கி நலமாக;
புதுமை கண்டு துணிவாக:
புரட்சிவழி ஒன்று சொல்!

கொ.பெ.பி.அய்யா.