சிம்மக் குரலுக்கு அஞ்சலி!
மாலைச் செய்திகள்
மனம் அழுகச்செய்தது!!
மாலை வெய்யிலாய்
மயங்குமென நம்பினேன்
காலைச்செய்திகள்
கண்ணீரில் நனைந்தன!!
ஆலய மணியோசை
அடங்கியதோ அய்யகோ!
ஆண்டவன் கட்டளையோ!
ஆண்ட குரல் ஓய்ந்ததோ!
ஆறுமனமே ஆறு என்றே
அழைத்தானோ அவனடிக்கே!
பாடும் பாட்டில் மயங்கியதோ!
பரலோகம் கொண்டதோ!
உலகை விட்டுப்போனாலும்
உந்தன் குரல் எம் சொந்தம்!
எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்
மெட்டுக்குர்ல் கேட்டினிக்கும்!
தமிழ்த தாயும் அழுகிறாள்!
தனித் தமிழ்க் குரலோனே!
தமிழ் அழகு உச்சரிப்பும்
அமிழ்த மொழி கேட்பதெப்போ!
நெற்றி நிறை பட்டையிட்டு
நேர் வரை நேயம் தொட்டு
பற்றி நல் மனித வாழ்வு
பண்புத்தமிழ் மணக்க வாழ்ந்தாய்!
விருதுகள் அத்தனையும்,
விரும்பித்தானே வந்தன,
பெருமைகளும் பெற்றன,
பின்னும அவை வாழ்ந்தன!
சௌந்தர ராஜனே!
சௌந்தர்ய வாச்னே!
சௌண்டுக்கும் ராஜன் நீ
சாவதும் நீ இல்லை!
உயிருடல் சொந்தக்காரன்
ஒப்பந்தம் செய்தபடி
உயிரதை மீட்டாலும்
உடலைப் போட்டாலும்
குரல் அவன் சொந்தமென
கொண்டு செல்லக் கூடுமோ!
இறைவனடி சேர்ந்த நீ
இளைப்பாரி சாந்தி பெறு!
மறையாது உன் குரல்
மண்ணும் விண்ணும் ஒலிக்குமே!
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment