காலைப் பொழுது.
சின்னஞ் சிறு பொழுதது,,
சேவல் கூவி எழுப்புது.
கண்ணங் கருமைக் கரைகிறது
கதிரவன் வரவு வளர்கிறது.
ஊதல் காற்று இதமாக,
உலவ வருகுது பதமாக,
பறவைகள் கூடிப் பாடியே
பரவும் வரவும் செய்கிறது.
பனியில் இரவு நனைந் துதான்,
பாவம் முழுதும்
குளிர்ந்துதான்!
மெல்லப் போர்வை யிருள் விலகும்.
கள்ளத் தனமாய் கதிர் நுழையும்.
மங்களப் பாவையர் கூடி
மஞ்ள் பூசி நீராடி,
தங்ககள் வீடு தலை வாசல்
எங்குங்கோலம் வரைகிறார்.
ஆழ்ந்த நல் லுறக்கமோ!
ஆதவன் கண் சிவந்தான்.
வாழ்வாதாரம் தேடும் பாவை
வழியேநின்று வரவேற்போ!
கொ.பெ..பி.அய்யா.
No comments:
Post a Comment