Thursday, 2 October 2025

கர்மயோகி காமராசர்.

கடைசிக் கருணை!!

காமராசர் பிறந்தநாள் வாழ்தது
(15/7/1903-----2/10/1975)

கடைசிக் கருணை!!

காமராசர் பிறந்தநாள் வாழ்தது
(15/7/1903-----2/10/1975)

கடைசிக் கருணையாம்
காமராசர் புகழ் வாழ்க!
ஊழலற்ற ஆட்சி தந்த
உத்தமர் புகழ் வாழ்க!

எத்தனை எத்தனை தானங்கள்,
அத்தனை அத்தனை யோகங்கள்,
கண்தானம் மிஞ்சிய தானம் 
கல்வித் தானம்

படிக்காத மேதையவர்
பண்பாளர் புகழ் வாழ்க!
பசிமறந்தப் பாடசாலை
பகலுணவுப் புகழ் வாழ்க!
பசுமைத்தமிழ் நாடுசெய்த
பாரிமகன் புகழ் வாழ்க!

இறுதி வரை வீடில்லாத
ஏழையவர் புகழ் வாழ்க!
அரசியல் துறவியவர்
அறவாழி புகழ் வாழ்க!

தூற்றினோரும் போற்ற வரும்
தூயரவர் புகழ் வாழ்க!
ஏற்பான தொண்டதனின்
இமயமவர் புகழ் வாழ்க!

பிறர் மனம் வருத்தாத
பெருமையவர் புகழ் வாழ்க!
இடித்தோரையும் ஏற்கின்ற
இனியாரவர் புகழ் வாழ்க!

சுயநலம் பேணாதச்
சொக்கதங்கம் புகழ் வாழ்க!
சொந்தமே மக்களென்ற
சொந்தக்காரர் புகழ் வாழ்க!

தொண்டே வாழ்வான
தொண்டரவர் புகழ் வாழ்க!
நாடன்றி வேறொன்றும்
நாடாராம் புகழ் வாழ்க!

நாட்டு வளப் பூகோளம்
நடந்தறிந்த புகழ் வாழ்க!
வீடொன்றும் நாடாராம்
விந்தை நாடார்
 புகழ் வாழ்க!

விருதுபட்டிக் கிராமத்தின்
விருது அவர் புகழ் வாழ்க!
சிவகாமி குமாரசாமி
கர்மயோகிப் புகழ் வாழ்க!

ஜூலை  பதினைந்
துதித்த
கருஞ்சூரியன் காமராசர் புகழ் வாழ்க!
ஏழையர் வாழ்வுயர்த்திய
ஏழை மகன்புகழ் வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.






No comments:

Post a Comment