தமிழ் நாடு வாழ்த்து.
முருகேயருளே திருவே வாழ்க!
தமிழே!எமையாள் தாயே வாழ்க!
பல்லவ கொங்கு பாண்டியம்நாஞ்சில்
வல்லவ சேது ஈழம் சோழம்
எல்லாம் உனதே இலக்கிய முதலே
வெல்லுந் தமிழே வாழ்க!
காவேரி பொன்னி பாலாறு பெண்ணை
தாமிரபரணி வைகை
நதிகள்
பூமூன்று விளையும் பொங்கிடக்கருணை
நீ தந்தருளும் வளமே வாழ்க
வங்கம் மன்னார் இந்துமாக் கடல்கள்
பங்கமாகா கீழ்தென் அரண்கள்.
மங்கா உன் புகழ் பாடிடும்
ரணஅலைகள்
தங்காத்தேடும் தமிழே வாழ்க!
மேற்கும் கிழக்கும் மலைத்தொடர் கூட்டம்
ஈர்ககும் வாசனை இந்திரத் தோட்டம்.
பார்ககும் உலகின் பரவச ஆட்டம்
ஏற்கும் வல்ல தமிழே வாழ்க!
தாயே தமிழே தயாளு நீயே!
சேயே எம்மைக் காப்பதும்
நீயே!
அன்னை உன்னை அல்லது யாரே!
அருள்வாயம்மா ஆகட்டும் ஜெயமே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment