மகளீர் தினம்.
மாதராய்ப் பிறப் பதற்கோ
மாதவம் செய்ய வேணும்.
ஏங்கிய கவிஞர் அவர்
மங்கையாகப் பிறப்பாரோ!
மகளீர் படுந் துயரங்களை
மனந் தாங்கிக் கொள்வரோ!
மகளீர் தின நாளின்று
மகளீர்க்கோ மகிழ்ச்சி யில்லை
மகளீரும் மனித ரென்றே
மதிக்க இங்கே மனிதரில்லை.
மலர் சூடும் பெண்டீரினி
மடிக் கத்தி சூடவேணும்.
ஆசைப் பொருளோ பெண்?.
அலையும் வேசைப் பயல்களே!
மானுடமே தலை குனிந்து
மனம் நொந்து துடிக்கிறதே!
வெறி நாய்கள் ஒழிக்கவே
வேலு நாச்சி எழுவாளோ!!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment