கவி பழகு கண்மணி.
கவி பழகு கண்மணி
கவி பழகு!
புவி அழகுப் பூவே!
கவி பழகு!
பாரதி கற்றுத் தந்த,
பழகு தமிழ் புதுக்கவிதை,
கூறும் மொழி வழியிலே
கூசாது கவி பழகு!
சேதியைச் சிங்காரித்து
சிறு வரிகள் செய்குவாய்.
ஆதியை அஞ்சாது
அறிந்த நடை பழகுவாய்.
புத்தம் புது மொட்டு நீ!
சந்தம் அது மெட்டிலே,
வித்தைப் புது கவி பாட
தத்தித் தத்திப் பழகிடலாம்.
நினைத்தைச் சொல்லலாம்.
நேர்த்தியாய் பாடலாம்.
பொருத்துவதும் புனைவதும்
விருத்தியாகும் பழக்கதில்.
இசையுஞ் சொல் இசைந்திடும்.
இசைச்சேர கவி யினிக்கும்.
இரசனைக்குச் சொல்
தேடும்
வசமாகும் கவி யோகம்.
சொல்லாளும் திறன் தேர்ந்து
சொல்லும் பொருள்
நயம் சேர்ந்து
அலங்கார லயம் கோர்த்து
ஆக்குவாய் கவி மாலை!
அவசரங்கள் ஆகாது
ஆழம் கணடு தேடணும்.
தவம் பெறும் ஞானமாம்
கவிதயது பழகலாம்.
படைத்ததைச் சொல்லுமுன்,
பலமுறை சரி ஆய்ந்து,
விடை பகர வினாக் கண்டும்
விளங்கும் கவி பழகுவாய்!
முக்காலக் கவிஞர்களின்
சொக்குங் கவிச் சுந்தரம்.
கற்கண்டாய் சுவைத்துக்கொண்டு
கவி வரையப் பழகுவாய்!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment